எண்டோவெனஸ் லேசர் நரம்பு அறுவைசிகிச்சை என்றால் என்ன?

எண்டோவெனஸ் லேசர் நரம்பு அறுவைசிகிச்சை என்பது வெரிகோஸ் வெயின்ஸிற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவ நடைமுறையாகும். அறுவை சிகிச்சை முறைகளோடு ஒப்பிடும்போது, விரைவான மீட்பு நேரத்தைக் கொண்டிருக்கக்கூடிய இது, வலியற்ற மற்றும் குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு கொண்ட சிகிச்சை முறை ஆகும்.

இந்த செயல்முறையில், வெரிகோஸ் வெயின்ஸை மூடுவதற்கு லேசர் வெப்பமானது பயன்படுத்தப்படுகிறது. உடலானது தானாகவே இரத்தத்தை அருகிலிருக்கும் நரம்புகளுக்கு திசைமாற்றி அனுப்புகிறது, எனவே நோயாளிகளுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் வீக்கம் மற்றும் வலி ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் கிடைத்திடும்.

எனக்கு எண்டோவெனஸ் லேசர் நரம்பு அறுவைசிகிச்சை ஏன் தேவைப்படக்கூடும்?

வெரிகோஸ் வெயின்ஸ் என்பது அத்தகைய தீவிரமான மருத்துவ நிலை இல்லை என்றாலும் கூட, இவை தோலின் மேல்பரப்பிற்கு வெளியே உப்பி இருக்குமாறு தோற்றமளிக்கும் நரம்புகளை வீக்கம் கொள்ளச் செய்திடும். சில சூழல்களில், நோயாளிகள் எவ்விதமான வலி அல்லது அசௌகரியத்தை உணரமாட்டார்கள், மேலும் உடனடி மருத்துவ கவனிப்பும் தேவைப்படாது.

வெரிகோஸ் வெயின்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பகுதியில் வலி மற்றும் வீக்கத்துடன் கூடிய, எரிச்சல் மற்றும் புண் ஏற்படக்கூடிய நோயாளிகளுக்கு, இரத்த உறைவு மற்றும் டீப் வெய்ன் த்ரோம்போசிஸ் (DVT) போன்ற வாழ்வை-அச்சுறுத்தக்கூடிய மருத்துவ சிக்கல்களை தவிர்க்கும் வகையில், சரியான நேரத்திற்கான சிகிச்சை இன்றியமையாதது ஆகும்.

எனவே எண்டோவெனஸ் லேசர் நரம்பு அறுவைசிகிச்சையானது, சுற்றோட்ட அமைப்பிலிருந்து வெரிகோஸ் வெயின்ஸை நீக்குவதற்கும், ரத்தம் குளமாக தேங்குவதை தவிர்ப்பதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சையானது சேதமடைந்த பகுதியில் வீக்கம் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. மேலும் இது செயல்மிக்க சிரை புண்கள், நாள்பட்ட சிரை பற்றாக்குறை, போன்ற அபாய காரணிகளுக்கான வாய்ப்பை குறைக்கவும் உதவுகிறது.

எண்டோவெனஸ் லேசர் நரம்பு அறுவைசிகிச்சையின் அபாயங்கள் யாவை?

அனைத்து மருத்துவ முறைகளுமே சில இடர்களுடன்தான் செயல்படுத்தப்படுகின்றன. வெரிகோஸ் வெய்ன்ஸிற்கு செய்யப்படும் லேசர் சிகிச்சையின் போது பின்வரும் சில பொதுவான சிக்கல்கள் எழக்கூடும்.

  1. நோய்த்தொற்று
  2. ரத்தப்போக்கு
  3. அந்த இடம் எரிந்து போதல்
  4. சிகிச்சை அளிக்கப்பட்ட நரம்பில் வலி
  5. நரம்பில் பாதிப்பு
  6. ரத்த உறைவு
  7. தோலின் நிறத்தில் மாற்றங்கள்

அறுவைசிகிச்சை முறைகளைக் காட்டிலும், எண்டோவெனஸ் லேசர் சிகிச்சையின் அபாய காரணிகளின் நிகழ்தகவு மற்றும் தீவிரத் தன்மையானது மிகவும் குறைவானதே ஆகும்.

நான் எவ்வாறு எஎண்டோவெனஸ் லேசர் வெரிகோஸ் வெயின் அறுவைசிகிச்சைக்கு தயாராக முடியும்? 1. உங்களது சுகாதார பயிற்சியாளரானவர், உங்களது மருத்துவ வரலாறு குறித்து கேட்டறிந்து கொள்வார், அதன்பின் சேதமடைந்த பகுதியில் உடல்ரீதியான ஆய்வையும் மேற்கொள்வார். நீங்கள் சில ரத்த பரிசோதனைகள் மற்றும் நோய் கண்டறிதல் பரிசோதனைகள் செயல்படுத்தப்பட கேட்கப்படுவீர்கள். இந்த நிலையானது, லேசர் சிகிச்சையை மேற்கொள்ள நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களா என்பதனை உறுதி செய்வது ஆகும். 2. நடைமுறைக்கு முன்னர், உங்களுக்கு ஏதேனும் இரத்த உறைவு அல்லது இரத்தப்போக்கு கோளாறுகள் இருப்பின், அதுகுறித்து நீங்கள் உங்களது மருத்துவரிடம் அறிவிக்க வேண்டும். 3. நீங்கள் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் பிற்சேர்ப்புகள், மூலிகைகள், முதலியன உட்பட அனைத்து மருந்துகளை குறித்தும் உங்களது மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். ஒருவேளை உங்களுக்கு ரத்த-மெலிவூட்டி வழங்கப்படும் பட்சத்தில், மறக்காமல் அதனை குறிப்பிட வேண்டும். நடைமுறைக்கு பிறகு இரத்த உறைதலை பாதிக்கக்கூடிய இதர மருந்துகள் குறித்தும் உங்களது மருத்துவருடன் பேசுங்கள். 4. மேலும், உங்களுக்கு இருக்கக்கூடிய லேட்டக்ஸ், டேப், மாறுபட்ட சாயங்கள், மயக்க மருந்துகள், போன்றவற்றிற்கான அலர்ஜிகளை குறித்து உங்களது மருத்துவரிடம் தெரிவியுங்கள். 5. மருத்துவர் உங்களிடம் செயல்முறை குறித்து விளக்கிய பின்னர், உங்களை தொந்தரவு செய்யும் கேள்விகளை கேட்க மறக்காதீர்கள். 6. உங்கள் மருத்துவர் ஒரு ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் இடுமாறு உங்களை கேட்டுக் கொள்வார். கையொப்பம் இடுவதற்கு முன்னர் அதனை கவனமாக படிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எண்டோவெனஸ் லேசர் நரம்பு அறுவை சிகிச்சையின்போது என்ன நடக்கும்? லேசர் நரம்பு சிகிச்சையானது தலையீட்டு கதிரியக்கவியலாளரால் செயல்படுத்தப்படும். 1. நீங்கள் மருத்துவமனையில் வழங்கப்படும் ஆடையை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள், அதன்பின் பரிசோதனை மேசையின் மீது படுக்க வேண்டும். லேசர் கதிர்வீச்சிலிருந்து உங்களது கண்களை பாதுகாக்கும் வகையில், உங்களுக்கு பிரத்தியேகமான கண் கண்ணாடிகள் வழங்கப்படும். 2. மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பகுதியை உள்ளூர் மயக்க மருந்தை பயன்படுத்தி மருத்துவர் மரத்துப் போகுமாறு செய்வார். அறுவைசிகிச்சை நடைமுறைகளுக்கு மாறாக, இந்த செயல்முறைக்கு பொதுவான மயக்க மருந்து தேவைப்படாது. 3. சுகாதார பயிற்சியாளரானவர், சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நரம்புகளை ஆய்வு செய்யும் பொருட்டு, நடைமுறைக்கு முன்னரும் நடைமுறையின் போதும், டோப்லர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனை பயன்படுத்துவார். டோப்லர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆனது, ஒலி அலைகளை பயன்படுத்தி திரையில் நரம்பின் படத்தை உருவாக்கும். 4. மருத்துவர் உங்களது தோலில் சிறிய வெட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நரம்பிற்கு கேத்தடாரை உள்நுழைந்து வழிநடத்துவார். ஒரு மெல்லிய லேசர் பைபரானது கேத்தடாருக்குள் நுழைக்கப்படும், இது சேதம் அடைந்த நரம்பை மூடுவதற்கு பயன்படும். வெரிகோஸ் வெயின்ஸ் சுருங்கி, உடலுக்குள் உறிஞ்சப்படும். எண்டோவெனஸ் லேசர் சிகிச்சைக்கு நீங்கள் மருத்துவமனையில் தங்க தேவையில்லை, ஏனெனில் இது பொதுவாக மருத்துவரின் மருத்துவமனையிலேயே வெளிப்புற நோயாளிகளின் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும். இச்செயல்முறையானது ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்ளும், மேலும் நோயாளியானவர் அந்நாளிலேயே வீடு திரும்பலாம். மேற்கொள்ளப்படும் வெட்டும் மிகவும் சிறிதானது என்பதால் தையல்கள் தேவையில்லை. எனவே எண்டோவெனஸ் லேசர் சிகிச்சையானது எவ்வித தழும்புகளையும் ஏற்படுத்தாது. ஒருவேளை நீங்கள் உங்களது கால்களில் சில சிறிய சிராய்ப்புகளை காணக்கூடும், ஆனால் அவையும் இரண்டு வார காலத்தில் மறைந்துவிடும். நடைமுறையானது நிறைவு செய்யப்பட்ட பின்னர், தளர்வான-பொருந்தக்கூடிய ஆடைகளை அணியுமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள். எண்டோவெனஸ் லேசர் நரம்பு அறுவைசிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும்? எண்டோவெனஸ் லேசர் நரம்பு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சில எச்சரிக்கை நடைமுறைகள் பின்வருமாறு: 1. வீக்கத்தை குறைக்க உதவும் வண்ணம், சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் பேக்கை பயன்படுத்தலாம், ஆனால் அதனை 15 நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்க வேண்டாம். 2. சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியை அன்றாடம் ஆய்வு செய்யவும். கட்டின்மீது வெளிர் இளஞ்சிவப்பு நிற திரவம் வெளியேறுவதை காண்பது பொதுவானதுதான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் இருப்பதை நீங்கள் அடையாளம் காணும்பட்சத்தில், உங்களது மருத்துவரிடம் பேசவும். 3. கீறல் போடப்பட்ட தளத்தை 48 மணி நேரங்களுக்கு தண்ணீரில் உட்படுத்த வேண்டாம். 4. மருத்துவரின் அறிவுறுத்தலின்படி சுருக்க காலுறைகளை அணியவும். இது வீக்கத்தை தவிர்க்க உதவுவதோடு, ரத்தம் உறைதல் அல்லது குளமாதலை தடுக்கிறது. 5. ஒரே நேரத்தில் நீண்ட கால இடைவெளிகளுக்கு அமரவோ அல்லது நிற்கவோ வேண்டாம். அமரும்போது, உங்களது கால்களை உயர்த்திப்பிடித்த வண்ணம் வைத்திருப்பதை உறுதி செய்திடுங்கள். 6. இயக்கத்தில் இருங்கள், ஆனால் குதிக்கவோ அல்லது கனமான பொருட்களை தூக்கவோ வேண்டாம். ஒரு நாளில் 3 முறைகளுக்கு, 10 முதல் 20 நிமிடங்களுக்கு மேல் நடப்பதை நீட்டிக்க வேண்டாம். 7. 1 முதல் 2 வாரங்களுக்கு வெந்நீரில் குளிப்பதை தவிர்க்கவும் நீங்கள் முன்னர் பயன்படுத்திய ரத்த-மெலிவூட்டிகள் மற்றும் இதர மருந்துகளை தொடரலாமா என்பதனை உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். நடைமுறைக்கு பிறகான பின்தொடர்தல் சரிபார்ப்பில், லேசர் சிகிச்சை சரியாக வேலை செய்துள்ளதா என்பதை சரிபார்க்க, மருத்துவர், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனை பரிந்துரைக்கக்கூடும். பின்வரும் சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்: சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சிவந்துபோதல், வெப்பமாக உணர்தல் அல்லது ஏதேனும் வெளியேறுதல் போன்ற நோய்தொற்றுக்கான எந்தவிதமான ஆரம்ப அறிகுறிகளை நீங்கள் காணுதல் சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் வீக்கம் இருந்து, அது தணியாமல் இருத்தல் உங்களது அன்றாட செயல்முறைகளுக்கு தடையாக இருக்கும் வண்ணம், நீங்கள் ஏதேனும் வலியை உணர்தல் முடிவுரை எண்டோவெனஸ் லேசர் நரம்பு அறுவை சிகிச்சையானது, வெரிகோஸ் வெய்ன்ஸிற்கான சிறந்த சிகிச்சை முறையாக இதுவரை இருந்து வருகிறது. இது வலியற்றது மற்றும் குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு கொண்டது என்பதோடு மட்டுமல்லாமல், விரைவான மீட்பு நேரத்துடன், வெரிகோஸ் வெயின்ஸ் மீண்டும் தோன்றுவதற்கான குறைந்தபட்ச வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. உங்களது அசிங்கமான மற்றும் வலிமிக்க வெரிகோஸ் வெயின்ஸிலிருந்து உங்களை காத்து உதவக்கூடிய ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த மருத்துவரை நீங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், அவிஸ் வாஸ்குலர் மையத்திலிருந்து, டாக்டர். ராஜா வி. கொப்பல்லா அவர்களை தவிர வேறு ஒருவரையும் நம்ப வேண்டாம். டாக்டர். ராஜா வி. கொப்பல்லா அவர்கள், சர்வதேச தகுதிகளை கொண்டிருக்கும், மிகவும் பயிற்சி பெற்ற வாஸ்குலார் அறுவைசிகிச்சை நிபுணர் ஆவார். தலையீட்டு கதிரியக்கவியலாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டிருப்பதோடு, வாஸ்குலார் கோளாறுகளுக்கான சிகிச்சைகளில் கைத்தேர்ந்தவர். அவிஸ் வாஸ்குலார் மையமானது, சமீபத்திய மருத்துவ உபகரணத்தையும், மிகவும் தொழில்முறை வாய்ந்த ஊழியர்களையும் கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தில் மிகச்சிறந்தது என புகழ்பெற்ற, அவிஸ் வாஸ்குலார் மையம், வெரிகோஸ் வெயின்ஸ் சிகிச்சைக்கான மருத்துவ நிறுவனங்களில் மிகச்சிறந்தது என்பதில் ஐயமில்லை. உங்களது ஆலோசனையை பெற, இன்றே பதிவு செய்திடுங்கள்!